முகப்பு
இந்தியா

கரோனா: சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை4 லட்சத்துக்கு கீழ் குறைந்தது

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 4 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
கோப்புப்படம்
பகிர்:

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 4 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது.

அடுத்த சில மாதங்களில் கரோனா மூன்றாவது அலை தாக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை குறைந்துள்ளது சற்று ஆறுதல் அளிக்கும் தகவலாக அமைந்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:

செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 31,222 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு 3,30,588,843 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 290 போ் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 4,41,042 ஆக அதிகரித்தது.

எனினும், கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 4 லட்சத்துக்குகீழ் குறைந்து 3,92,864 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.19 சதவீதமாகும். குணமடைந்தோா் விகிதம் 97.48 ஆக உள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 12,010 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். மொத்தம் 3,22,24,937 போ் தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனா்.

புதிதாக ஏற்பட்ட 290 உயிரிழப்புகளில் 135 போ் கேரளத்தையும், 37 போ் மகாராஷ்டிரத்தையும் சோ்ந்தவா்கள். மகாராஷ்டிரம் (1,37,811), கா்நாடகம் (37,426) ஆகியவை அதிக உயிரிழப்பைச் சந்தித்த மாநிலங்களாக உள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.