முகப்பு
இந்தியா

உ.பி. தேர்தலில் 100 இடங்களில் போட்டியிடுவோம்: ஒவைசி உறுதி

உத்தரப் பிரதேச தேர்தலில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 100 இடங்களில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
கோப்புப்படம்
பகிர்:


உத்தரப் பிரதேச தேர்தலில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 100 இடங்களில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியது:

"வரவிருக்கும் உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் நாங்கள் 100 தொகுதிகளில் போட்டியிடுவோம். நாங்கள் அடிமைகள் அல்ல. எங்கள் நலனுக்காகப் பணியாற்றுவோம். உத்தரப் பிரதேச தேர்தல்களில் பாஜகவை வீழ்த்துவதே எங்கள் இலக்கு. ஹிந்துக்கள் எங்களது சகோதரர்கள். அவர்களுக்கும் தொகுதிகளை ஒதுக்குவோம்."

இதனிடையே, மாஃபியா டானாக இருந்து அரசியல்வாதியாக மாறிய அடீக் அகமது மனைவி சாய்ஸ்டா பர்வீன் குடும்பத்தினருடன் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தார். அடீக் அகமது தற்போது குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் சபர்மதி சிறையில் உள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →