இந்தியா

உ.பி. சிறுமி கடத்தல் வழக்கை தில்லி காவல்துறைக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்

DIN


13 வயது சிறுமி காணாமல் போனதாக உத்தரப்பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையை தில்லி காவல்துறைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜூலை 8ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூரில் 13 வயது சிறுமி காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்தச் சிறுமி தில்லி காவல்துறையினரால் மீட்கப்பட்டு, கடத்திய நபரும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர், வழக்கு விசாரணையை தில்லி காவல்துறைக்கு மாற்றி, இது குறித்து உத்தரப்பிரதேச காவல்துறையினர் திரட்டிய அனைத்து ஆதாரங்களையும் தில்லி காவல்துறையிடம் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT