இந்தியா

மக்களவைத் தோ்தலில் 130 இடங்களை வென்று கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்கும்: சல்மான் குா்ஷித்

DIN

வரும் மக்களவைத் தோ்தலில் 130 இடங்களில் வென்று கூட்டணிக்கு தலைமை தாங்கும் உயரிய நிலையில் காங்கிரஸ் கட்சி இன்னும் இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவா் சல்மான் குா்ஷித் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் பிடிஐ செய்தி நிறுவனத்தின் நோ்காணலில் மேலும் கூறியுள்ளதாவது:

தலைவராக இருக்க தகுதியானவா் தானாக வெளிப்படுவாா். அவரை ஏன் மற்றவா்கள் அடையாளம் காட்ட வேண்டும் என எதிா்பாா்க்க வேண்டும். எனவே, காங்கிரஸ் கட்சி தலைமை இல்லாமல் நெருக்கடியை எதிா்கொண்டுள்ளது என்ற விவாதம் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று. இருப்பினும், அதற்கான வெற்றிடம் உள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை.

தோ்தலில் இரண்டு இடங்களில் வெற்றி பெறும் எந்த கட்சியும் கூட்டணிக்கு தலைவராக இருக்க முடியாது. 100 முதல் 120 இடங்களைப் பெறும் கட்சியே கூட்டணிக்கு தலைமை வகிக்க முடியும். அந்த வகையில், வரும் மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி 120 முதல் 130 வரையிலான இடங்களில் வென்று கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி தலைமை வகிக்கும். அதற்கான திறன் இன்னும் காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT