இந்தியா

தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்தாரா ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்?

DIN

உண்மையான ஷரியத் சட்டத்தை பின்பற்றினால் மற்ற உலக நாடுகளுக்கு எல்லாம் தலிபான்கள் எடுத்துக்காட்டாக திகழ்வார்கள் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தெரிவித்திருந்தது பெரும் விமரிசனத்திற்குள்ளானது. இந்நிலையில், தான் தெரிவித்த கருத்து வேண்டுமென்ற திரிக்கப்பட்டுள்ளது என முஃப்தி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "எனது கருத்து திரிக்கப்பட்டதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஷரியத் சட்டத்தை நிலைநாட்டியதாகக் கூறும் பெரும்பாலான நாடுகள் அதன் உண்மையான விழுமியங்களை உள்வாங்கி கொள்ளவில்லை. எனவே, மற்றவர்கள் மீது குறை கூற முடியாது. என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? எந்த ஆடையை அணிய வேண்டும்? என பெண்களின் மீது கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்கின்றனர்.

ஆண்கள், பெண்கள், சிறுபான்மையினர் என அனைவருக்கும் சமமான உரிமைகளை வழங்கவே உண்மையான 'மதினா சாசனம்' எடுத்துரைக்கிறது. சொல்லப்போனால், பெண்களுக்கு சொத்து உரிமை, சமூக உரிமை, திருமண உரிமை, சட்ட உரிமை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. 

மதச்சார்பின்மையின் முக்கிய அங்கமான மத சுதந்திரம், சமத்துவம் ஆகிய உரிமைகள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய வரலாறு முழுவதுமே பெண் விடுதலை, பெண்கள் அதிகாரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகவே உள்ளது" என பதிவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு நவீன சிகிச்சை

மூலைக்கரைப்பட்டியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நிறுவன தினம்...

அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உரக் கடை உரிமையாளா் மரணம்

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

SCROLL FOR NEXT