இந்தியா

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம்!

DIN

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான  தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும்பொருட்டு ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்களுடைய தரத்தை உயர்த்தும்பொருட்டு கடந்த 2016 முதல் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. 

இதற்கான உருவாக்கப்பட்ட தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்எப்), மாணவா்கள் தோ்ச்சி விகிதம், கற்பித்தல், கற்றல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி உள்ளிட்ட 11 அம்சங்களை கொண்டு தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது. 

அதன்படி, 2021-ஆம் ஆண்டுக்காக சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான  தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். 

இதில், பொதுப்பிரிவில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஐஐஎஸ்சி பெங்களுரு இரண்டாமிடத்தையும், ஐஐடி மும்பை முன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. 

ஆய்வுப்பிரிவில் முதலிடம் - ஐஐஎஸ்சி பெங்களுரு, 2-ஆம் இடம் - சென்னை ஐஐடி, 3 -ஆம் இடம் - ஐஐடி மும்பை பெற்றுள்ளது. 

சிறந்த மருத்துவக்கல்லூரி பிரிவில், முதலிடம் - தில்லி எய்ம்ஸ், 2-ஆம் இடம் - சண்டிகர் PGIMER, 3 -ஆம் இடம் - வேலூர் சிஎம்சி பெற்றுள்ளது. 

சிறந்த கல்லூரி பிரிவில், சென்னை லயோலா கல்லூரி மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது. முதலிடம் - தில்லி மிரண்டா ஹவுஸ் கல்லூரி, இரண்டாமிடம் - எல்.எஸ்.ஆர். பெண்கள் கல்லூரி, தில்லி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

ஆந்திர பேரவைத் தேர்தல்: ரோஜாவுக்கு பின்னடைவு

ஆந்திரம்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! 200க்கு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்

கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!

SCROLL FOR NEXT