முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 25 ஆயிரம் பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 25,010 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் புதிதாக 25,010 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தது:

"கேரளத்தில் புதிதாக 25,010 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 177 பேர் பலியாகியுள்ளனர். நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 2,37,643 ஆக உள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டும் விகிதம் 16.53 சதவிகிதம்.

பள்ளிகளைத் திறப்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கிறோம். இதுதொடர்பாக வல்லுநர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறோம்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.