தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு: பஞ்சாப் அரசு அதிரடி
பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்படும் என அம்மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்படும் என அம்மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் ஒரே ஆயுதமாக தடுப்பூசி இருந்து வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்துவது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
Advertisement
முதல் தவணை கரோனா தடுப்பூசிகூட செலுத்திக் கொள்ளாத பஞ்சாப் மாநில அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கட்டாய விடுப்பு அளிக்கப்படும். மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு இது பொருந்தாது எனத் அறிவித்துள்ளனர்.