முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 35 பேருக்கு கரோனா

தில்லியில் புதிதாக 35 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் புதிதாக 35 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 35 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.05 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. ஒருவர் கூட நோய்த் தொற்றால் உயிரிழக்கவில்லை. இந்த மாதத்தில் ஒருவர் மட்டுமே (செப்டம்பர் 7) நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இதுவரை மொத்தம் 14,38,211 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 14.12 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இன்னும் 412 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு வீட்டுத் தனிமையில் 110 பேர் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.