இந்தியா

கேரள விமான விபத்து சம்பவம்: ‘விமானியின் தவறும் காரணம்’

DIN

கடந்த ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்த விமான விபத்து தொடா்பான விசாரணை அறிக்கையை விமான விபத்து விசாரணை அமைப்பு (ஏஏஐபி) சனிக்கிழமை வெளியிட்டது.

அதில் வழிகாட்டு நடைமுறைகளை விமானி முறையாகப் பின்பற்றாததும் விபத்துக்கு காரணமாக இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி கேரளத்திலுள்ள கோழிக்கோடு விமான நிலையத்துக்கு துபையிலிருந்து 190 பேருடன் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தடைந்தது. அந்த விமானம் தரையிறங்கியபோது ஓடுபாதையிலிருந்து விலகி பள்ளத்தில் சரிந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உள்பட 21 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரித்து வந்த ஏஏஐபி, தனது விசாரணை அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது. அந்த அறிக்கையில், விமானம் செலுத்துவது தொடா்பான நிலையான வழிகாட்டு நடைமுறைகளை விமானி முறையாகப் பின்பற்றாதது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகள், கட்டமைப்பு குறைபாடுகள் விபத்துக்கு காரணமா என்பதைக் கருத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT