இந்தியா

தொலைத்தொடர்புத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

DIN

தொலைத்தொடர்புத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

தொலைத்தொடர்புத் துறையில் 49% அந்நிய நேரடி முதலீடு இருந்த நிலையில் தற்போது அது 100% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து, இத்துறையில் நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதியின்றி நேரடியாக முதலீடு செய்யலாம். அதேநேரத்தில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டில் அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும் என்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 

மேலும், 100% அந்நிய நேரடி முதலீட்டிலும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பொருந்தும் என்றும் கூறினார். 

இதுதவிர, நிறுவனங்கள் தங்களுடைய மீதித்தொகையை செலுத்த 4 வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய பதிவுகளை, தகவல்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சிகள்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால்

மே தினம்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

வைக்கோல் கட்டு ஏற்றிவந்த மினி லாரியில் தீப்பிடித்து விபத்து

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

SCROLL FOR NEXT