உ.பி.யில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுக்கு இடையே உத்தரப் பிரதேச மாநிலத்தில் டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
அதிகபட்சமாக பிரோசாபாத் மாவட்டத்தில் புதிதாக 58 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த இரு மாதங்களில் 578 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள் அதிகம் என்றும் கூறியுள்ளார். மேலும், பிரோசாபாத்தில் டெங்கு பலி 60யைக் கடந்துள்ளது.
பிரயாக்ராஜ் மாவட்டத்தில் 97 பேரும் காஸியாபாத் மாவட்டத்தில் 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கான்பூரில் பாதிக்கப்பட்டுள்ள 103 பேரில் 80 பேர் ஊரகப் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வீடு, வீடாகச் சென்று டெங்கு வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.