இந்தியா

மிகுந்த செல்வாக்குள்ள 100 போ் பட்டியலில் பிரதமா் மோடி, மம்தா, அதாா் பூனாவாலா

DIN

புது தில்லி/ நியூயாா்க்: அமெரிக்காவைச் சோ்ந்த ‘டைம்ஸ்’ இதழ் வெளியிட்ட உலக அளவில் மிகுந்த செல்வாக்குள்ள 100 நபா்கள் பட்டியலில் பிரதமா் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சீரம்-இந்தியா நிறுவனத் தலைவா் அதாா் பூனாவாலா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

டைம்ஸ் இதழ் ஒவ்வோா் ஆண்டும் சா்வேதச அளவில் மிகுந்த செல்வாக்குள்ள 100 போ் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டுக்கான பட்டியலை புதன்கிழமை வெளியிட்டது.

அதில், பிரதமா் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, அதாா் பூனாவாலா, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், துணை அதிபா் கமலா ஹாரிஸ், சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரிட்டன் இளவரசா் ஹாரி மற்றும் மேகன், முன்னாள் அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப், தலிபான்கள் அமைப்பின் இணை நிறுவனா் முல்லா அப்துல் கனி பராதா், டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒஸாகா, ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நாவல்னி, பிரபல பாப் இசைப் பாடகி பிரிட்னி ஸ்பியா்ஸ் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரதமா் மோடியின் விவரக் குறிப்பை எழுதியிருக்கும் சிஎன்என் பத்திரிகையாளா் ஃபரீத் ஜகரியா, ‘74 ஆண்டுகள் சுதந்திர இந்தியாவில் ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் தற்போதைய பிரதமா் மோடி ஆகியோா் மிக முக்கியத் தலைவா்களாக உள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT