இந்தியா

கேரளத்தில் புதிதாக 22,182 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 22,182 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

கேரளத்தில் புதிதாக 22,182 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,21,486 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் புதிதாக 22,182 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
அதிகபட்சமாக எர்ணாகுளத்தில் 2,901 பேரும், திருவனந்தபுரத்தில் 2,135 பேரும், மலப்புரத்தில் 2,061 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,46,228ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,86,190 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

கரோனாவிலிருந்து இன்று 26,563 பேர் மீண்டனர். இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 42,36,309 ஆக உள்ளது. அதேசமயம் கரோனாவால் இன்று மேலும் 178 பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 23,165ஆக உயர்ந்துள்ளது. 
பல்வேறு மாவட்டங்களில் 5,54,807 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் பலி!

பிப்ரவரி மாதப் பலன்கள் - சிம்மம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT