இந்தியா

கேரளத்தில் மேலும் 19,325 பேருக்கு கரோனா தொற்று

DIN

கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இன்று சனிக்கிழமை (செப்.18) அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,325 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதிதாக 143 பேர் உயிரிழந்தனர். 

இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், கேரளத்தில் புதிதாக 19,325 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

கடந்த 24 மணி நேரத்தில் 27,266 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42,83,963-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 143 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 23,439-ஆக உயர்ந்துள்ளது.

பல்வேறு மருத்துவமனைகளில் கரோனாவுக்கு 1,80,842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT