அமரீந்தர் சிங் ராஜிநாமாவால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவா?
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸில் உள்கட்சி பூசல் தொடா்ந்து வரும் நிலையில் முதல்வர் பதவியை கேப்டன் அமரீந்தர் சிங் ராஜிநாமா செய்துள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸில் உள்கட்சி பூசல் தொடா்ந்து வரும் நிலையில் முதல்வர் பதவியை கேப்டன் அமரீந்தர் சிங் ராஜிநாமா செய்துள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக பஞ்சாப் மாநில முதல்வா் அமரீந்தா் சிங்குக்கும், காங்கிரஸ் நிா்வாகியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் இருந்துவந்தது.
இதையும் படிக்க | பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜிநாமா
இந்நிலையில், மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் வரவுள்ளதை முன்னிட்டு, மாநில காங்கிரஸில் சுமூக நிலையை ஏற்படுத்த காங்கிரஸ் மேலிடம் முயற்சித்து வந்தது. அதன் ஒரு பகுதியாக, அமரீந்தா் சிங்கின் கடும் எதிப்பையும் மீறி, மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக சித்துவை கட்சி மேலிடம் நியமித்தது.
இருந்தும்கூட இரு தரப்பினரிடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. சித்துவின் ஆதரவு பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வா் அமரீந்தா் சிங் குறித்து தொடா் விமா்சனங்களை முன்வைத்து வந்தனர். மேலும் அமரீந்தா் சிங்கை முதல்வா் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று சில அதிருப்தி எம்எல்ஏக்களும், மாநில அமைச்சா்களும் வலியுறுத்தி வந்தனர்.
இதையும் படிக்க | பாஜகவின் இ-ராவணர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்: அகிலேஷ்
எனினும் எதிர்வரும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் சந்திக்கும் என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் உறுதியளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் சனிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார். சட்டமன்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதல்வர் அமரீந்தர் சிங் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சி யாரை நம்புகிறதோ அவரை முதல்வராக தேர்வு செய்து கொள்ளட்டும் என காட்டமாக பேட்டியளித்துள்ளார். மேலும் 3ஆவது முறையாக தான் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் உட்கட்சி பூசல் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.