இந்தியா

‘சித்துவிற்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது’: போர்க்கொடி தூக்கிய அமரீந்தர் சிங்

DIN

பஞ்சாப் மாநிலத் தலைவர் சித்துவிற்கு பாகிஸ்தான் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு உள்ளது என முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த அமரீந்தர் சிங் குற்றம் சுமத்தியுள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டதிலிருந்து முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும் சித்துவிற்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. 

இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சி தகுதியான நபர் என யாரை நினைக்கிறதோ அவரை நியமிக்கட்டும் என தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தது குறித்து பேட்டியளித்துள்ள அவர், “நவ்ஜோத் சிங் சித்து ஒரு திறமையற்ற மனிதர். அவர் ஒரு பேரழிவாக இருக்கப்போகிறார். அடுத்த முதல்வராக அவர் முன்மொழியப்பட்டால் அதனை நான் எதிர்ப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “அவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும். அவர் (பாகிஸ்தான் இராணுவத் தலைவர்) கமர் ஜாவேத் பஜ்வா மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருடன் நெருங்கிய நண்பராக இருக்கிறார். அவர் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் எதிர்ப்பேன்” என போர்க்கொடி தூக்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT