முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,413 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,413 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,413 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. 

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 3,413 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 65,21,915 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 8,326 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 63,36,887 பேர் குணமடைந்துள்ளனர்.

49 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,38,518 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 42,955 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு குணமடைவோர் விகிதம் 97.16 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.12 சதவிகிதமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.