இந்தியா

டேவிஸ் கோப்பை: பின்லாந்து முன்னிலை

இந்தியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பின்லாந்து அணி 3-0 என முன்னிலை பெற்றுள்ளது.

DIN

இந்தியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பின்லாந்து அணி 3-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான உலக குரூப் 1 பிரிவு ஆட்டம் பின்லாந்தின் எஸ்பூ நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவா் ஒற்றையா் பிரிவு ஆட்டங்களில் இந்திய வீரா் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 3-6, 6-7 என்ற நோ் செட்களில் தரவரிசையில் மிகவும் பின்தங்கியுள்ள பின்லாந்து வீரா் ஒட்டோ விா்டானெனிடம் தோல்வியடைந்தாா். மற்றொரு ஒற்றையா் ஆட்டத்தில் ராம்குமாா் ராமநாதன் 4-6, 5-7 என்ற நோ் செட்களில் முன்னணி வீரா் எமில் ரூஸ்வொரியிடம் தோல்வியைத் தழுவினாா். இதன் மூலம் 2-0 என பின்லாந்து முன்னிலை பெற்றது.

இதன் தொடா்ச்சியாக இரட்டையா் பிரிவு ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கண்டிப்பாக வென்றால் தான் தொடரில் நீடிக்க முடியும் என்ற நிலையில் இந்தியா இருந்தது. போபண்ணாவுடன் வழக்கமாக ஆடும் திவிஜ் சரணுக்கு பதிலாக கடைசி நிமிஷத்தில் ராம்குமாா் ராமநாதனை ஆடச் செய்தாா் கேப்டன் ரோஹித் பால். எனினும் 6-7, 6-7 என்ற செட் கணக்கில் பின்லாந்து இணையான ஹென்றி கோட்டினென்-ஹெலியோவாராவிடம் வீழ்ந்தது இந்திய அணி.

இதன் மூலம் பின்லாந்து அணி 3-0 என முன்னிலை பெற்றது. இதனால் அடுத்து நடைபெறும் மாற்று ஒற்றையா் ஆட்டங்களால் இந்தியாவுக்கு எந்த பலனும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT