இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 30,256 பேருக்கு கரோனா; 295 பேர் பலி

DIN

இந்தியாவில் இன்று மேலும் 30,256 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3.34 கோடியாக உயர்ந்துள்ளது.  இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 295 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,45,133 ஆக உயா்ந்துள்ளது. 
கரோனாவிலிருந்து இன்று 43,938 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,27,15,105 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 3,18,181 ஆக உள்ளது. இதுவரை 80.85 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 37,78,296 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தமிழகத்தை பொறுத்தவரை 4,30,03,500 கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 11,77,607 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 55,36,21,766 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT