முகப்பு
இந்தியா

கேரளம் : நவம்பர்-1 முதல் பள்ளிகள் திறப்பு

கேரளத்தில் வருகிற நவம்பர்-1 ஆம் தேதியிலிருந்து 1-7 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருகிறது.

Updated On : 20 செப்டம்பர், 2021 at 2:53 PM
கேரளம் : நவம்பர்-1 முதல் பள்ளிகள் திறப்பு
பகிர்:

கேரளத்தில் வருகிற நவம்பர்-1 ஆம் தேதியிலிருந்து 1-7 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருகிறது.

நாட்டிலேயே கரோனாவின் தீவிரம் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றான கேரளத்தில் சில நாட்களாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் பள்ளிகள் திறப்பதைப் பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

Advertisement

இதில் 1-7 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருகிறது.

மேலும் 10,12 வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் - 15 முதல் பள்ளிகள் தொடங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மாநில முதல்வர் பினராயி விஜயன் பள்ளியிலேயே மாணவர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.