இந்தியா

பஞ்சாப் குண்டுவெடிப்பு : முக்கியத் தீவிரவாதி கைது

DIN

பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஃபாசிகா மாவட்டத்தின் ஜலதாபாத் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதியைக் கைது செய்தனர்.

கடந்த செப்-15 ஆம் தேதி பல்வீந்தர் சிங் (24) என்பவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் திடீரென வெடித்துச் சிதறியதில் சம்பவ இடத்திலேயே பல்வீந்தர் பலியானர்.

விசாரணையில் வாகனம் வெடித்ததற்கு வெடிகுண்டு தான் காரணம் என தெரிந்ததும் குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். 

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பர்வீன் குமார் (33) என்பவரை கைது செய்து விசாரித்ததில் பல்வீந்தர் தினமும் பூங்காவிற்குச் செல்லும் பழக்கம் உடையவர் என்பதால் அவருடைய வாகனத்தில் வெடிகுண்டு வைத்து பெரிய சேதத்தை உருவாக்க நினைத்ததாக வாக்கு மூலம் அளித்திருக்கிறார்.

மேலும் கைதான பர்வீன் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புடன் தொடர்பிலிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT