இந்தியா

பெங்களூரு 2-ம் கட்ட மெட்ரோ பணிகள்: 2025-க்கு பதில் 2024-ல் முடிவடையும்

பெங்களூருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ஓராண்டுக்கு முன்னதாகவே முடிக்க வேண்டும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்

DIN

பெங்களூருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ஓராண்டுக்கு முன்னதாகவே முடிக்க வேண்டும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

பெங்களூரு மெட்ரோ கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்ட அவர், 2025-ம் ஆண்டுக்கு பதிலாக 2024-ம் ஆண்டுக்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நிர்வாகத்தினரைக் கேட்டுக்கொண்டார். 

பெங்களூரு மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே பாதுகாப்பு அதிகாரிகளின் குடியிருப்பு பகுதி முதல் சிவாஜி நகர் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. இதனை முதல்வர் பசவராஜ் பொம்மை நேரில் பார்வையிட்டார். 

இதன் பிறகு பேசிய முதல்வர் பொம்மை, மெட்ரோ பணிகளை முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். 2025-ம் ஆண்டு மெட்ரோ பணிகள் முடிவடையும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஓராண்டுக்கு முன்னதாகவே மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் பணிகளை முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT