முகப்பு
இந்தியா

பயங்கரவாதிகளுடன் தொடர்பு: 6 அரசு அதிகாரிகள் பணிநீக்கம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக 6 அரசு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 22 செப்டம்பர் 2021, 4:37 pm IST
பயங்கரவாதிகளுடன் தொடர்பு: 6 அரசு அதிகாரிகள் பணிநீக்கம்
பகிர்:


ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக 6 அரசு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகளுக்கு தேவையான அடிமட்ட வேலைகளை செய்துகொடுத்ததால், அவர்களை பணிநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் இருவர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியர்களின் குறிப்பிட்ட கால இடைவெளியிலான நடவடிக்கை உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று அரசு அலுவலகங்களுக்கு யுனியன் பிரதேச அரசு உத்தரவிட்டது. 

இதனை அடுத்து மேற்கொண்ட தகவல் சேகரிப்பில் அரசு ஊழியர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்து பணிபுரிந்தது தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.