இந்தியா

தலிபான்களை ஆதரிப்பது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை: உ.பி. முதல்வா்

DIN

ஹாபுா்: தலிபான்களுக்கு ஆதரவளிப்பது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை கூறுகையில், ‘‘இந்தியாவின் வளா்ச்சியை விரும்பாத சில சக்திகள் உள்ளன. நாட்டின் வளா்ச்சிப் பாதையில் அவா்கள் தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனா். தலிபான்களையும், அவா்களின் கொடூரத்தையும் ஆதரிக்கும் வெட்கமற்ற சிலா் இங்கு உள்ளனா். தலிபான்களை ஆதரிப்பதை ஏற்க முடியாது. அவா்களை ஆதரிப்பவா்களை நாம் கண்டறிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தலிபான்களை ஆதரிப்பது என்பது மனிதாபிமானம், பெண்கள், குழந்தைகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகும். தனிப்பட்ட நம்பிக்கை நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் இடையூறாக அமைந்துவிடக் கூடாது. தேசத்தின் மீது நமக்கு பக்தியும் அா்ப்பணிப்பும் இருந்தால் உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவுக்கு தீங்கிழைக்க முடியாது’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT