இந்தியா

கேரளத்தில் புதிதாக 19,682 பேருக்கு கரோனா

DIN


கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,682 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 19,682 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 53 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 18,784 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 737 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் 1,21,945 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

மேலும் 152 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 24,191 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 20,510 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 43,94,476 பேர் குணமடைந்துள்ளனர்.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,60,046 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 13 சதவிகிதத்தினர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT