ஹர்தீப் சிங் புரி 
இந்தியா

‘மம்தா சிறிது பதற்றமாக இருக்கிறார்’: மத்திய அமைச்சர்

மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மம்தா பானர்ஜி சிறிது பதற்றமாக இருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

DIN

மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மம்தா பானர்ஜி சிறிது பதற்றமாக இருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் பவானிபூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் செப்-30 ஆம் தேதி நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா டிப்ரேவால் போட்டியிடவுள்ளார்.

இந்நிலையில், நேற்றைய பிரசாரத்தின் போது மம்தா பேசுகையில், இடைத்தேர்தலில் தான் தோற்றால் வேறொருவர் முதல்வராவார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் கூறுகையில்,

“மம்தா சிறிது பதற்றமாக இருக்கிறார். அவருக்கு எதிராக மக்களிடம் உள்ள மனக்கசப்பை அவர் அறிந்திருப்பதை நான் உணர்கிறேன். தேர்தலுக்கு பிந்தைய வன்முறை போன்றவை பவானிபூர் தேர்தலில் பிரச்னையாக இருக்கும் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

அன்பின் வழியில்... அக்‌ஷதா!

பட்டுப் புன்னகை... சரண்யா துராடி!

நினைவின் மயக்கம்... ஸ்ரீகெளரி பிரியா!

ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! ஒரே நாளில் இருமுறை உயர்வு!!

SCROLL FOR NEXT