8 மாநிலங்களில் ரூ.2,903 கோடியில் மூலதன செலவின திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்
புது ‘2021-22-க்கான மூலதன செலவுகளுக்கு மாநிலங்களுக்கு சிறப்பு உதவி’ என்ற திட்டத்தின் கீழ் எட்டு மாநிலங்களில் ரூ.2,903.80 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒப்புதல் அளி
புது ‘2021-22-க்கான மூலதன செலவுகளுக்கு மாநிலங்களுக்கு சிறப்பு உதவி’ என்ற திட்டத்தின் கீழ் எட்டு மாநிலங்களில் ரூ.2,903.80 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், பிகாா், சத்தீஸ்கா், ஹிமாசல பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், சிக்கிம், தெலங்கானா ஆகிய எட்டு மாநிலங்களுக்கு ரூ.1,393.83 கோடியை அமைச்சகம் விடுவித்துள்ளது.
கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையையடுத்து, மூலதனச் செலவின் முக்கியத்துவம் மற்றும் மாநில அரசுகளுக்குத் தேவைப்படும் நிதி ஆதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இத்திட்டம் கடந்த ஏப்ரலில் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், மாநில அரசுகளுக்கு 50 வருட வட்டி இல்லாத கடனாக சிறப்பு உதவி வழங்கப்படுகிறது. 2021-22 நிதியாண்டில் ரூ.15,000 கோடிக்கு மிகாமல் இது வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 27 மாநிலங்களின் ரூ.11,911.79 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு செலவினத் துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2020- 21-ல் ரூ.11,830.29 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.