இந்தியா

பஞ்சாப் அமைச்சரவை நாளை விரிவாக்கம் 

DIN

பஞ்சாப் அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படவிருப்பதாக அம்மாநில முதல்வர்  சரண்ஜீத் சிங் சன்னி தெரிவித்துள்ளார். 
பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங்குக்கும், அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், அமரீந்தா் சிங்கின் எதிா்ப்பை மீறி சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கட்சித் தலைமை கடந்த ஜூலை மாதம் நியமித்தது. 
அதன்பிறகு இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இந்தச் சூழலில், அமரீந்தா் சிங் தனது முதல்வா் பதவியை கடந்த சனிக்கிழமை ராஜிநாமா செய்ததார். இதைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னியும், இரண்டு துணை முதல்வர்களும் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். 

இந்த நிலையில் பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம் நாளை மாலை 4.30 மணிக்கு விரிவாக்கம் செய்யப்படவிருப்பதாக அம்மாநில முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி தெரிவித்துள்ளார். முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். 
மேலும் அமைச்சரவையில் பலர் புதிய முகங்கள் இடம்பெறலாம் என்றும் அதேசமயம் அமரீந்தா் சிங்கிற்கு நெருக்கமான நான்கு அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பபடலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT