இந்தியா

கதர் ஆடைகளை மக்கள் வாங்க முன்வர வேண்டும் - 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!

DIN

வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளதையொட்டி, மக்கள், கதர் ஆடைகளை வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். 

ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் உரையாற்றி வருகிறார். 

இன்று 81 வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,

தூய்மை இயக்கத்திற்கு காந்தியின் பங்களிப்பு அளப்பரியது. மேலும் மகாத்மா காந்தி தூய்மையை, சுதந்திரக் கனவுடன் தொடர்புபடுத்தினார்.

இன்றைய இளைஞர்கள், சுதந்திர இயக்கத்திற்கு தூய்மைப் பிரசாரம் எந்த அளவுக்கு பங்களித்து என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். 

இன்று, பல தசாப்தங்களுக்குப் பிறகு, தூய்மை இயக்கம் மீண்டும் ஒரு புதிய இந்தியாவின் கனவோடு தொடங்கப்பட்டுள்ளது. 

மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் பார்த்தால், அவருடைய வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்கள் மூலமாக பெரிய தீர்மானங்களை எடுத்தார் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

சுதந்திர இயக்கத்தில் காதிக்கு இருந்த பெருமையை இன்றைக்கும் காதிக்கு வழங்குகிறார்கள் நம்முடைய இளைஞர்கள். தில்லியில் உள்ள காதி ஷோரூம் ஒன்றில் ஒருநாளில் ஒரு கோடிக்கும் அதிகமாக விற்பனை நடைபெறுகிறது என்பதே இதற்கு சான்றாகும். காதி பொருள் களை வாங்கி இந்த ஆண்டு காந்தி ஜெயந்தியை மிகவும் உற்சாகமாக கொண்டாடுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

SCROLL FOR NEXT