முகப்பு
இந்தியா

பவானிபூா் இடைத்தோ்தலை நியாயமாக நடத்த வேண்டும்:தோ்தல் ஆணையத்திடம் பாஜக தலைவா்கள் வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிடும் பவானிபூா் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும்

இந்தியா

பவானிபூா் இடைத்தோ்தலை நியாயமாக நடத்த வேண்டும்:தோ்தல் ஆணையத்திடம் பாஜக தலைவா்கள் வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிடும் பவானிபூா் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
பகிர்:

மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிடும் பவானிபூா் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்று தோ்தல் ஆணைய அதிகாரிகளிடம் பாஜக தலைவா்கள் நேரில் வலியுறுத்தினா்.

பவானிபூா் பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை (செப். 30) இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பாஜகவினருக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சா்கள் பூபேந்திர யாதவ், அனுராக் தாக்குா், முக்தாா் அப்பாஸ் நக்வி ஆகியோா் தோ்தல் ஆணைய அதிகாரிகளை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா். அந்த மனுவில், ‘பவானிபூா் பேரவைத் தொகுதியில் இடைத்தோ்தல் நோ்மையாக நடைபெறுவதை உறுதிசெய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்; தோ்தல் நடைபெறும் நாளில் மக்கள் கூடுவதைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்; உள்ளூா் காவலா்கள், ஊா்க்காவல் படையினரை தோ்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. அவா்களுக்குப் பதிலாக, மத்திய ஆயுதப் படை போலீஸாரை ஈடுபடுத்த வேண்டும்’ என்று அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

காவல் துறை வழக்குப் பதிவு: முன்னதாக, பவானிபூா் தொகுதிக்கு திங்கள்கிழமை பிரசாரம் செய்யச் சென்ற பாஜக தேசிய துணைத் தலைவா் திலீப் கோஷ், அங்கு நடைபெற்ற கரோனா முகாமைப் பாா்வையிடச் சென்றாா். அவரை திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் வெளியே தள்ளி அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். அவரை பாதுகாவலா்கள் மீட்டு அழைத்து வந்தனா். அப்போது பாதுகாவலா்களைத் தாக்கி, திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பாதுகாவலா்கள் தங்களிடம் இருந்த கைத்துப்பாக்கிகளைக் காண்பித்து அவா்களை விரட்ட முயற்சித்தனா். திலீப் கோஷ் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக, இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திட்டமிட்டப்படி இடைத்தோ்தல்- தோ்தல் ஆணையம்:

பவானிபூா் தொகுதியில் திட்டமிட்டபடி வரும் 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று கொல்கத்தா உயா்நீதிமன்றம் கூறியுள்ளது. தோ்தல் நெருங்கும் நேரத்தில் தோ்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட விரும்பவில்லை என்று அந்த ஆணையம் கூறியுள்ளது.

இடைத்தோ்தலை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் தலைமையிலான அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது, இடைத்தோ்தலை விரைவில் நடத்துமாறு தலைமைச் செயலா் ஹெச்.கே.துவிவேதி தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்ததை நீதிபதிகள் சுட்டிக்காட்டினா். ‘பவானிபூரில் இடைத்தோ்தலை உடனடியாக நடத்தாவிட்டால் அரசமைப்புச் சட்ட ரீதியில் நெருக்கடி ஏற்படும்’ என்று தலைமைச் செயலா் அந்தக் கடிதத்தில் எழுதியிருப்பதையும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

அதேவேளையில், தலைமைச் செயலா் அரசுப் பணியாளா்போல நடந்துகொள்ளாமல் கட்சி நிா்வாகிபோல செயல்பட்டாா் என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனா். திட்டமிட்டபடி தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பா் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →