அமரீந்தர் சிங் (கோப்புப்படம்) 
இந்தியா

பாஜகவில் இணைகிறாரா அமரீந்தர் சிங்? தில்லி பயணம் குறித்து விளக்கம்

தில்லி சென்றுள்ள பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அமித்ஷாவை சந்தித்து பாஜகவில் இணைவது குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதை அமரீந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் மறுத்த

DIN

தில்லி செல்லவுள்ள பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அமித்ஷாவை சந்தித்து பாஜகவில் இணைவது குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதை அமரீந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் மறுத்துள்ளார்.

பஞ்சாப் மாநில முதல்வர் பதவியை அமரீந்தர் ராஜிநாமா செய்தபின் முதல்முறையாக இன்று தில்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும், இந்த சந்திப்பின்போது மோடியின் மத்திய அமைச்சரவையில் அமரீந்தருக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் பதவி வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகின.

இந்த தகவல்கள் குறித்து அமரீந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் கூறுகையில்,

“கேப்டன் அமரீந்தர் சிங்கின் தில்லி பயணம் குறித்து அதிகம் பேசப்படுகிறது. அவர் சொந்த விஷயங்களுக்காக தில்லி சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது தனது நண்பர்களை சந்திக்கவுள்ளார். மேலும், தில்லியில் உள்ள முதல்வர் அலுவலகத்தை காலி செய்யவுள்ளார்.”

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்க  அமரீந்தர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ராகுல் மற்றும் பிரியங்கா  ஆதரவளித்தனர். நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சித் தலைவரானது முதலே,  அவருக்கும், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

இதையடுத்து கடந்த வாரம் சண்டிகரில் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தனது ராஜிநாமா கடிதத்தை அமரீந்தர் சிங் வழங்கியதையடுத்து, புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி பதவியேற்றுக் கொண்டார்.

ராஜிநாமா செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமரீந்தர் சிங், வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் சித்துவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்தவுள்ளதாக காட்டமாக தெரிவித்தார்.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் அரசியல் நகர்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT