காங்கிரஸில் இணைந்தனர் கன்யா குமார், ஜிக்னேஷ் மேவானி 
இந்தியா

காங்கிரஸில் இணைந்த கன்யா குமார், ஜிக்னேஷ் மேவானி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கன்யா குமார், குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

DIN

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கன்யா குமார், குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவராக அறியப்பட்டவர் கன்யா குமார். இவரும் குஜராத்தை சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் கன்யா குமார் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். ஜிக்னேஷ் மேவானி சுயேட்சை எம்எல்ஏ-ஆக இருப்பதால் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணையவில்லை என்றாலும் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவதாகத் தெரிவித்தார்.

முன்னதாக தில்லியில் உள்ள டெல்லி ஷஹீத்-இ-ஆஸம் பகத் சிங் பூங்காவில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்யா குமார் மற்றும் ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அகழாய்வு தளத்தைப் பார்வையிட்ட முதல்வர் Stalin!

பூண்டி வெள்ளியங்கிரி கோயிலில் பக்தர்களை அலறவிட்ட ஒற்றை யானை!

விஜய் அரசியலில் நடிக்க அமித் ஷாவுடன் ஒப்பந்தம்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மல்லிகார்ஜுன கார்கே!

மழையினால் கைவிடப்பட்ட 2-ஆவது டி20: 8 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் ஆஸி.!

SCROLL FOR NEXT