முகப்பு
இந்தியா

அசாமில் லேசான நிலநடுக்கம்

அசாம் மாநிலத்தின் தெஸ்பூர் பகுதியில் இன்று(செப்-28) அதிகாலை 12.52 மணி அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

Updated On : 28 செப்டம்பர், 2021 at 3:29 PM
அசாமில் லேசான நிலநடுக்கம்
பகிர்:

அசாம் மாநிலத்தின் தெஸ்பூர் பகுதியில் இன்று(செப்-28) அதிகாலை 12.52 மணி அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 94 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.

மிதமான நிலநடுக்கம் என்பதால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

Advertisement

முன்னதாக கடந்த சனிக்கிழமை(செப்-25) அப்பகுதியின் அருகே அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பாங்கின் பகுதியில் 4.5 அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.