பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜிநாமா செய்ததையடுத்து 2 நாள்களுக்கு முன்பாக அமைச்சராகப் பதவியேற்ற ரசியா சுல்தானா தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 'நான்தான் சொன்னேனே': சித்து ராஜிநாமா குறித்து அமரீந்தர் ட்வீட்
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் அம்மாநிலத்தில் அடுத்தடுத்த அரசியல் பரபரப்பு அரங்கேறி வருகிறது.
நவ்ஜோத் சிங் சித்துவின் ராஜிநாமாவைத் தொடர்ந்து பஞ்சாப் முதல்வர் சன்னியின் அமைச்சரவையில் மாநில உயர்கல்வித்துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட ரசியா சுல்தானாவும் தற்போது தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இதனால் அம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த ராஜிநாமா நிகழ்வுகள் அம்மாநிலத்தின் அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.