‘தலித் முதல்வரானதை சித்துவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை’: ஆம் ஆத்மி விமரிசனம் 
இந்தியா

‘தலித் முதல்வரானதை சித்துவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை’: ஆம் ஆத்மி விமரிசனம்

தலித் ஒருவர் மாநில முதல்வரானதை சித்துவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ஆம் ஆத்மி கட்சி விமரிசித்துள்ளது.

DIN

தலித் ஒருவர் மாநில முதல்வரானதை சித்துவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ஆம் ஆத்மி கட்சி விமரிசித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் குழப்பம் உச்சத்தை எட்டியுள்ளது. மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்ட நிலையில் அவருடனான மோதல் காரணமாக தனது முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜிநாமா செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து நவ்ஜோத் சிங் சித்து முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரண்ஜீத் சன்னி முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் செளரவ் பரத்வாஜ்,  “நவ்ஜோத் சிங் சித்து தலித் மக்களுக்கு எதிரானவர் என இதன்மூலம் தெரியவருகிறது. தலித் ஒருவர் முதல்வராக பதவியேற்றதை சித்துவால் ஏற்றுக் கொள்ளமுடியாமல் போனது வருத்தமானது” என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

SCROLL FOR NEXT