இந்தியா

என்னதான் நடக்கிறது பஞ்சாபில்? காங். தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் சித்து

DIN

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.

அடுத்தாண்டு பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் தலைவராக கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்ற சித்து இரண்டே மாதங்களில் பதவியை ராஜிநாமா செய்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்க  அமரீந்தர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ராகுல் மற்றும் பிரியங்கா  ஆதரவோடு நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சித் தலைவரானர்.

தொடர்ந்து அமரீந்தருக்கும் சித்துவுக்கும் மோதல் போக்கு நிலவியதையடுத்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து ராகுல், சித்து ஆதரவோடு சரண்ஜீத் சன்னி முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், இன்று தில்லி சென்றுள்ள அமரீந்தர் சிங் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து ராஜிநாமா செய்தவாக கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியிருப்பது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT