இந்தியா

பெங்களூரு: பள்ளி மாணவர்கள் 60 பேருக்கு கரோனா?

DIN

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த  60 பேர் பயிலும் தனியார் பள்ளியில் 2 மாணவிகளுக்கு நேற்று(செப்-28) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் கரோனா தொற்று குறைந்து வரும் சூழலில் கர்நாடகத்தில் சில நாட்களுக்கு முன் மேல்நிலை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. கடுமையான கட்டுப்பாடு நெறிமுறைகளுடன் வகுப்பறைகள் பராமரிக்கப்பட்டாலும் நேற்று பெங்களூருவில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் பயிலும் 60 மாணவிகளுக்கு கரோனா தொற்று  பாதித்திருக்கலாம் என்பதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பள்ளியை மாவட்ட சுகாதாரத் துறையினர் சீல் வைத்தனர்.

இதில் கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 44 மாணவிகளும் தமிழகத்தைச் சேர்ந்த 16 மாணவிகளும் அடங்குவர்.

கர்நாடகத்தில் கரோனா தொற்று மாணவர்களை பாதிக்கும் சூழலில் இன்னும் சில நாட்களில் 1 முதல் 10 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT