முகப்பு
இந்தியா

மக்கள் இறந்து கொண்டிருக்கும்போது ஸ்டெர்லைட்டை திறக்க முடியாது என சொல்வதா? உச்ச நீதிமன்றம்

மக்கள் இறந்து கொண்டிருக்கும் போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என்று சொல்வதாக என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
மக்கள் இறந்து கொண்டிருக்கும்போது ஸ்டெர்லைட்டை திறக்க முடியாது என சொல்வதா? உச்ச நீதிமன்றம்
பகிர்:


புது தில்லி: மக்கள் இறந்து கொண்டிருக்கும் போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என்று சொல்வதாக என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரம் டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்காக தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை சம்மதம் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் 27 நிறுவனங்கள் இயங்குகின்றன. ஆந்திரம், ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் தேவைக்குக் கூடுதலாக ஆக்ஸிஜன் கிடைக்கின்றது... வைகோ வெளியிட்ட புள்ளி விவரத்தைப் படிக்க..

அப்போது, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது. அதற்கு பதில்  நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள ஆலைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்று வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை தொடர்பான மனு மீது விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்று தூத்துக்குடி மக்களிடமிருந்து கருத்துகள் வந்துள்ளன. தமிழக அரசே ஸ்டெர்லைட் ஆலையை எடுத்து நடத்தினாலும் தூத்துக்குடியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூட்டை விரும்பவில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படித்துப் பார்க்கலாமே.. ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு அதிரடி பதில்

இதைக் கேட்ட உச்ச நீதிமன்றம், சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என்று சொல்லக் கூடாது. நாட்டில் மறக்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என்று சொல்வதா என்று கேள்வி எழுப்பியது.

மேலும் அதிகாரமிருந்தால் தேசிய பேரிடர் நிவாரண சட்டத்தின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய அரசு எடுத்து நடத்தலாமே? நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருக்கும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்று சொல்வதா? இது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →