முகப்பு
இந்தியா

ஹெலிகாப்டர் விபத்து: நாடாளுமன்றத்தில் நாளை அறிக்கை தாக்கல்?

முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நாளை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:


முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நாளை (வியாழக்கிழமை) அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே புதன்கிழமை விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய விபின் ராவத்தின் நிலை என்ன என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. விபத்துக்குள்ளான இடத்தில் 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, விபத்து குறித்த சூழல்களைத் தொடர்ந்து கண்காணித்து வரும் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைத்ததாகத் தகவல்கள் வெளியாகின. சம்பந்தப்பட்ட அமைச்சகம் விபத்து குறித்த தகவல்களை வெளியிடும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.

இந்த நிலையில், விபத்து குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நாளை (வியாழக்கிழமை) அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.