முகப்பு
இந்தியா

நாட்டில் 56 பேருக்கு ‘டெல்டா பிளஸ்’ கரோனா: மத்திய சுகாதாரத்துறை

நாடு முழுவதும் இதுவரை 56 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
நாட்டில் 56 பேருக்கு ‘டெல்டா பிளஸ் கரோனா
பகிர்:

நாடு முழுவதும் இதுவரை 56 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வரும் நிலையில், டெல்டா பிளஸ் மரபணு கரோனா வகையின் பரவல் வெகுவாக அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறையின் நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,

நாடு முழுவதும் 12 மாநிலங்களை சேர்ந்த 56 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஒருமுறை மட்டும் செலுத்தக்கூடிய ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. அந்த தடுப்பூசிகள் வெளிநாடுகளில் தயாரிக்கப்படுகிறது. ஆனால், ஹைதராபாத் பயோ இ நிறுவனத்தில் இந்த தடுப்பூசியை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

முழு கட்டுரையைப் படிக்க →