முகப்பு
இந்தியா

மகாராஷ்டிர மருத்துவமனை தீ விபத்தில் 11 பேர் பலி: பிரதமர் இரங்கல்

மகாராஷ்டிர மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
மகாராஷ்டிர மருத்துவமனை தீ விபத்தில் 11 பேர் பலி: பிரதமர் இரங்கல்
பகிர்:

புது தில்லி: மகாராஷ்டிர மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மருத்துவமனையில் இன்று நேரிட்ட தீ விபத்தில் 11 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில் கூறியிருப்பதாவது: “மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது துயரத்தை தந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →