இந்தியா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,774 பேருக்கு தொற்று: 621பேர் பலி

DIN


புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,774 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 621 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 8,774 

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,45,72,523​​​​​​​.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 9,481
இதுவரை குணமடைந்தோர்: 3,39,98,27 ஆக உயர்ந்துள்ளது.

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.34​​​​​​​% என்றளவில் அதிகரித்துள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 621. உயிரிழந்தோர் விகிதம் 1.35 சதவிகிதமாக குறைந்துள்ளது. கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,68,554.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,05,691. இது கடந்த 543 நாள்களில் இல்லாத அளவுக்குக் குறைவு. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.31 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மிகக் குறைவு.

621 புதிய இறப்புகளுடன், இறப்பு எண்ணிக்கை 4,68,554 ஆக உயர்ந்துள்ளது.

வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 0.85% ஆக உள்ளது. இத கடந்த 14 நாட்களில் 1 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது.

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 0.80% ஆக உள்ளது. இத கடந்த 55 நாள்களாக 2% சதவீதத்திற்கும் கீழ் உள்ளது.

பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்யும் கணக்கீடு.

கரோனா தடுப்பூசி:   நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,21,94,71,134 கோடி. கடந்த 24 மணி நேரத்தில் 82,86,058 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பரிசோதனை: இந்தியாவில் இதுவரை மொத்தம் 63,94,27,262 பரிசோதனைகளும், சனிக்கிழமை மட்டும் 10,91,236 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்னதானம்...

மலைவாழ் மக்கள் சங்க பேரவைக் கூட்டம்

தாமதமாகும் புதை சாக்கடைப் பணி

கல்லூரி மாணவா்களுக்கு வரலாற்றுச் சுவடுகள் பயிற்சி வகுப்பு தொடக்கம்

சா்வதேச அவசர சிகிச்சை தின நிகழ்ச்சி

SCROLL FOR NEXT