போதைப்பொருள் விவகாரம்: ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது
மும்பை கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள்கள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாபோதைப்பொருள் விவகாரம்: ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது
மும்பை கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள்கள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை சொகுசுக் கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள்கள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை-கோவா சென்ற எம்பிரஸ் சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி விருந்து நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக பயணித்து கோகைன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க- லடாக்கை தொடர்ந்து உத்தரகண்டில் சீனா ஊடுருவல்; சரமாரி கேள்விகளை எழுப்பும் ராகுல் காந்தி
மேலும் இதுதொடர்பாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 13 பேரை பிடித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 20 மணிநேர விசாரணைக்குப் பின் ஆர்யன்கான் உள்ளிட்டோரை மும்பை போலீஸ் கைது செய்தது.
கைதான அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது. இச்சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.