கேரளத்தில் புதிதாக 9,246 பேருக்கு கரோனா
கேரளத்தில் புதிதாக 9,246 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கேரளத்தில் புதிதாக 9,246 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மேலும் 10,952 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 96 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 48,29,944 ஆக உயர்ந்துள்ளது. இதில் 47,06,856 பேர் குணமடைந்துவிட்டனர். மொத்த பலி எண்ணிக்கை 26,667 ஆக உள்ளது.
இதையும் படிக்க | ஆர்யன் கான் ஜாமீன் மனு: அக். 20-க்கு தீர்ப்பு ஒத்திவைப்பு
இதன்மூலம், நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 95,828 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 88,733 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 39 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 8,808 பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 347 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
பல்வேறு மாவட்டங்களில் 3,33,634 பேர் கண்காணிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.