முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 19,765 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 19,765 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் புதிதாக 19,765 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய சமீபத்திய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,19,594 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் புதிதாக 19,765 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 45,59,628 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 19,702 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 43,73,966 பேர் குணமடைந்துள்ளனர். அதேசமயம், 142 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 24,039 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 1,61,026 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →