இதுவரை 88.96 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
இந்தியாவில் இதுவரை 88.96 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 88.96 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 58,80,843 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 88,96,14,483 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 36,02,83,201 இரண்டாம் தவணை - 8,29,14,910 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 15,94,88,042 இரண்டாம் தவணை - 7,67,86,029 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,13,31,706 இரண்டாம் தவணை - 5,61,87,315 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,72,732 இரண்டாம் தவணை - 88,93,916 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,52,652 இரண்டாம் தவணை - 1,50,03,980 |
| மொத்தம் | 88,96,14,483 |