முகப்பு
இந்தியா

கோவா பிட்ஸ் பிலானியில் 24 மாணவர்களுக்கு கரோனா

தெற்கு கோவாவில் உள்ள பிட்ஸ் பிலானி வளாகத்தில் 24 மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 1 ஏப்ரல், 2022 at 3:04 PM
பகிர்:

தெற்கு கோவாவில் உள்ள பிட்ஸ் பிலானி வளாகத்தில் 24 மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அந்நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி அர்ஜுன் ஹலர்ன்கர் கூறுகையில், 

கடந்த சில நாட்களில் கோவா பிட்ஸ் பிலானி வளாகத்தில் 24 மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இன்று மேலும் எட்டு பேரின் மாதிரிகள்  பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது. 

Advertisement

அவர்களின் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மேலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் தொடரவும், பல்கலையில் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தெற்கு கோவாவில் உள்ள பிட்ஸ் பிலானி வளாகத்தில் சுமார் 2,800 மாணவர்கள் உள்ளனர். பல்கலைக்கழகத்தில் நுழையும் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2 நாட்களாக தெர்மல் ஸ்கேன் செய்யப்படுகிறது என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.