முகப்பு
இந்தியா

தில்லி அரசுப் பள்ளிகளைப் பார்வையிடுவது பெருமை: அரவிந்த் கேஜரிவால்

தில்லி அரசுப் பள்ளிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டது எங்களுக்குப் பெருமையான நிகழ்வு என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

Updated On : 1 ஏப்ரல், 2022 at 5:54 PM
அரசுப் பள்ளிகளைப் பார்வையிடும் முதல்வர்கள்
பகிர்:

தில்லி அரசுப் பள்ளிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டது எங்களுக்குப் பெருமையான நிகழ்வு என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் இணைந்து மாதிரிப்  பள்ளிகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜரிவால், தில்லி வினோத் நகரிலுள்ள ராஜ்கியா சர்வோதயா மாதிரிப் பள்ளிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு அருகிலுள்ள மோஹல்லா கிளினிக்கையும் பார்வையிட்டு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார். 

கல்வியின் முன்னோடி மாநிலத்தின் முதல்வர், தில்லி அரசுப் பள்ளிகளைப் பார்வையிட்டது எங்களுக்குப் பெருமையானது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.