இந்தியா

சாலைப் பழுதால் தொழிலதிபர் அதிருப்தி: தங்கள் மாநிலத்திற்கு அழைத்த அமைச்சர்

DIN

பெங்களூரு சாலைகள் பழுதாகியுள்ளதாக தொழிலதிபர் ஒருவர் கவலைப்பட்டதைத் தொடர்ந்து, அவரை தெலங்கானா மாநில அமைச்சர் தங்கள் மாநிலத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

காட்டாபுக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரவிஷ் நரேஷ் பதிவுக்கு அமைச்சர் கே.டி.ராமா ராவ் இவ்வாறு பதிலளித்துள்ளார். 

டிஜிட்டல் பதிவுகளை சேமித்து வைக்கும் கட்டாபுக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவிஷ் நரேஷ், பெங்களூரு வெளிப்புறத்திலுள்ள கொரமங்கலா சாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், நாள்தோறும் மின் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், லட்சக்கணக்கில் வரிகளை மட்டும் விதிக்கிறார்கள், ஆனால் அடிப்படை வசதிகள்கூட சரியாக இல்லை. முறையான தண்ணீர் வசதி கூட இல்லை. இந்தியாவின் பல கிராமங்கள் கூட தற்போது நல்ல அடிப்படை வசதிகளைப்பெற்றுள்ளன. என்று சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

இதற்கு பதிலளித்த தெலங்கானா ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.டி. ராமா ராவ், உங்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு ஹைதராபாத்திற்கு வாருங்கள். நாங்கள் சிறப்பான அடிப்படை கட்டமைப்புகளைக் கொண்டுள்ளோம். நகரத்தில் எளிதாக சென்றுவர ஏதுவான முதன்மையான விமான நிலையங்களில் எங்களுடனையதும் ஒன்று.

எல்லாவற்றிற்கும் மேலாக எங்களுடைய அரசு, புதிய கண்டுபிடிப்புகளுக்கும், கட்டமைப்புகளுக்கும், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது என்று பதிலளித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT